மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,
பணிவான வணக்கங்கள்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம் பல்வேறு தோட்ட தொழிலாளர்கள், சிறு குறு விவசாயிகள், கூலி தொழிலாளிகள் வசிக்கும் பகுதி. இங்குள்ள மக்களின் பிள்ளைகள் செவிலியர் படிப்புக்கு நீலகிரி மாவட்டம் உதகை அரசு தலைமை மருத்துவ மனை அல்லது கோவை, ஈரோடு, சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு சென்றே படிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்க படுகின்றனர். பந்தலூர் பகுதியில் வேறு தொழிற் படிப்பிற்கான வசதிகளும் இல்லாத நிலை உள்ளது.
இப்பகுதியில் ஒரு அரசு மருத்துவமனை மற்றும் வட்டார சுகாதார நிலையம் 10க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகின்றது. தற்போது செவிலியர்கள் குறைபாடு இப்பகுதியில் உள்ளதால் அரசின் மருத்துவ சேவை பல்வேறு கிராம பகுதிக்கு சென்றடைவது சிரம்மத்தினை ஏற்படுத்துகிறது. இபகுதியில் செவிலியர் பயிற்சி பள்ளி ஆரம்பித்தால் பந்தலூர் மற்றும் கூடலூர் அரசு மருத்துவ மனைகள், கூடலூர் மருந்தகம், வட்டார சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயிற்சி வழங்கும்போது காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் நிரப்ப படுவதோடு இப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களின் பிள்ளைகளும் தொழிற் கல்வி பெற உதவியாக அமையும்.
எனவே பந்தலூர் பகுதியில் செவிலியர் பயிற்சி பள்ளி துவங்கி இப்பகுதியில் மக்கள் பயன் பெற உதவ வேண்டும் என பனிவன்புடன் கேட்டு கொள்கின்றோம்.
நாள் இப்படிக்கு
இடம் : பந்தலூர்
நௌசாத் தலைவர்.
மகாத்மா காந்தி பொது சேவை மையம்